ஜனாதிபதியுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை பார்த்த கேர்ணல் ரத்னப்பிரிய!

Report Print Steephen Steephen in கிரிக்கெட்

ஜனாதிபதியின் புதல்வர் தஹாம் சிறிசேன பொலநறுவையில் ஒழுங்கு செய்திருந்த கிரிக்கெட் போட்டியை பார்க்க கேர்ணல் ரத்னப்பிரிய பந்து சென்றுள்ளார்.

ஒரு அணியில் ஆறு பேர் விளையாடும் மைத்திரிபால சிறிசேன வெற்றிக் கிண்ணத்திற்கான மென்பந்து கிரிக்கெட் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கேர்ணல் ரத்னப்பிரிய பந்து கிரிக்கெட் போட்டியை பார்த்துள்ளார்.

இந்த இராணுவ அதிகாரி முல்லைத்தீவு விஸ்வமடு பிரதேசத்தில் இருந்து இடமாற்றம் பெற்று அம்பேபுஸ்ஸ சென்ற போது, விஸ்வமடு மக்கள் அவரை கட்டித்தழுவி கதறி அழுததுடன் பெரிய மரியாதை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

இது ஊடகங்களில் வெளியானதுடன் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்ட செய்தியாக மாறியது.

இதனையடுத்து இடமாற்றத்தை உடனடியாக ரத்துச் செய்து, கேர்ணல் ரத்னப்பிரிய பந்துவை விஸ்வமடு பிரதேசத்தில் கடமையில் ஈடுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த உத்தரவு சமூக வலைத்தளங்களில் வெகுவாக பாராட்டப்பட்டது.

Latest Offers