பந்தை சேதமாக்கிய விவகாரம்! இலங்கை அணித் தலைவருக்கு தண்டனை

Report Print Murali Murali in கிரிக்கெட்

பந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்காக இலங்கை அணித் தலைவர் தினேஸ் சந்திமாலுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தனது போட்டிப் பணத்தில் 100 வீதத்ததை செலுத்த வேண்டியுள்ளதுடன், 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் சந்திமாலுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ம் நாளில் போட்டி நடைபெறும் போது பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும், பந்தின் அமைப்பில் மாற்றம் ஏற்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் நிராகரித்திருந்தார்.

இதனிடையே, போட்டிக்கு இடைநடுவே சந்திமால் தனது காற்சட்டை பையில் ஏதொவொன்றை எடுத்து வாயில் போட்டு மென்று அதனை பந்தின் மேற் புறத்தில் தடவி, துடைத்த காணொளி ஒன்றும் வெளியாகியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சர்வதேச கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்றைய தினம் சந்திமாலுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers