இளம் வீரர் தொடர்பில் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ள விடயம்

Report Print Kamel Kamel in கிரிக்கெட்

அணியின் ஒழுக்க விதிகளை மீறுவதற்கு இடமில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தம்புள்ளையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இளம் வீரர் தனுஷ்க குணதிலக்க தொடர்பில் கேள்வி எழுப்பபட்ட போதே பிரபல வீரரான மெத்யூஸ் இவ்வாறு பதிலளித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

எவரேனும் ஓர் வீரர் அணியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டால், அதற்கான விளைவுகளையும் அவர் எதிர்நோக்க வேண்டும்.

அணியின் வீரர் ஒருவர் இல்லாமல் போவது வருத்தமளிக்கின்றது. எனினும் ஒழுக்க விதிகளை மீறுவதற்கு நாம் இடமளிப்பதில்லை.

அணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்தால் அதற்கான பலன்களையும் அவர்கள் அனுபவிக்க வேண்டும்.

அவர்களினால் சிறந்த வீரர்களாக உருவாக முடியாது. அணியின் விதி முறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

மைதானத்திற்கு உள்ளே போன்றே மைதானத்திற்கு வெளியேயும் வீரர்களின் செயற்பாடுகள் ஒட்டுமொத்த அணியின் நன் மதிப்பினை பாதிக்கும் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers