கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்திலிருந்து 5 இந்தியர்கள் வெளியேற்றம்

Report Print Ajith Ajith in கிரிக்கெட்

இலங்கை - இந்திய மகளிர் அணிகளுக்கான இறுதி கிரிக்கெட் போட்டி நேற்று கட்டுநாயக்கவில் நடைபெற்ற போது 5 இந்தியர்களை மைதானப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு இலங்கை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அவர்களின் சந்தேகமான செயற்பாடுகளே இதற்கான காரணமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்பின்னர் அவர்கள் 5 பேரும் விசாரணைகளுக்காக இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நேற்றைய ஆட்டத்தின்போது இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் இந்திய மகளிர் அணியை தோற்கடித்திருந்தது.

இதேவேளை கடந்த மாதம் இந்திய மற்றும் பாகிஸ்தானியர்கள் சிலர் இவ்வாறு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...