பாகிஸ்தானின் லாகூருக்கு எடுத்துச்செல்லப்படும் உலக வெற்றிக்கிண்ணம்!

Report Print Ajith Ajith in கிரிக்கெட்

2019ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண வெற்றிக்கிண்ணம் இன்று பாகிஸ்தானின் லாகூருக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.

இந்த வெற்றிக்கிண்ணம் பாகிஸ்தானில் இன்று முதல் எதிர்வரும் 13ஆம் திகதிவரை காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.

முதலில் லாகூரில் காட்சிப்படுத்தப்படும் கிண்ணம் பின்னர் இஸ்லாமாபாத், மற்றும் கராச்சி ஆகிய நகரங்களுக்கும் எடுத்துச்செல்லப்படவுள்ளது.

இந்த கிண்ணம் 2019, மே30 முதல் ஜூலை 14வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கும்.

கிண்ணம், கிரிக்கட் பிரசித்தம் பெற்ற நாடுகளைவிட அமெரிக்கா உட்பட்ட நாடுகளுக்கும் இந்த கிண்ணம் எடுத்துச்செல்லப்படவுள்ளது.

இந்த வெற்றிக்கிண்ணம் 2018 ஆகஸ்ட் 27ம் திகதி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கட்பேரவையின் தலைமையத்தில் இருந்து காட்சிக்காக எடுத்துச்செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers