இலங்கை கிரிக்கெட் சபையில் மாற்றம்

Report Print S.P. Thas S.P. Thas in கிரிக்கெட்

ரொஷான் மஹானாம ICC உடன் இணைந்து பணியாற்றியவர். இலங்கை கிரிக்கெட் சபைத்தலைவர் பதவிக்கு அவரே பொருத்தமானவர் என ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால தலைவராக ரொஷான் மஹானாம நியமிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபை கலைக்கப்பட்டு புதிய கிரிக்கெட் சபைத் தெரிவுக்கான தேர்தல் மார்ச் மாதம் அளவில் நடைபெறும் என கூறப்பட்டுள்ள நிலையில் அதன் இடைக்காலத்தலைவராக, இலங்கை அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய ICC போட்டி மத்தியஸ்தருமான ரொஷான் மாஹானாம நியமிக்கப்படவுள்ளார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்காக முன்னாள் வீர்ர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரால் வழங்கப்பட்ட அறிக்கை உதாசீனம் செய்யப்பட்டதாகவும் மறுபடியும் அவ்வாறு நடக்க தான் விடப்போவதில்லை என்றும் குறிப்பிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, மூவருக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

ரொஷான் மஹானாம ICC உடன் இணைந்து பணியாற்றியவர். இலங்கை கிரிக்கெட் சபைத்தலைவர் பதவிக்கு அவரே பொருத்தமானவர் எனவும் ஹரீன் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers