இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா தெரிவு

Report Print Kamel Kamel in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை கைப்பற்றிக் கொள்ளும் கடுமையான பிரயத்தனங்களில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தரப்பினரும், முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தரப்பினரும் ஈடுபட்டிருந்தனர்.

இதன்படி, திலங்க சுமதிபால தரப்பில் ஷம்மி சில்வா தலைமையிலான குழுவொன்றும், அர்ஜூன தரப்பில் ஜயந்த தர்மதாசவும் போட்டியிட்டனர்.

விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஷம்மி சில்வா 83 வாக்குகளையும், ஜயந்த தர்மதாச 56 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.

Latest Offers