இன்னும் சில காலங்களில் இலங்கை...! குமார் சங்கக்கார தெரிவிப்பு

Report Print Kamel Kamel in கிரிக்கெட்
1518Shares

இம்முறை கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து அல்லது இந்தியா ஆகிய நாடுகளில் ஒன்றே வெற்றியீட்டும் என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு அண்மையில் அளித்த நேர்காணலில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஓர் சிறந்த அணி எனவும், இன்னும் சில காலங்களில் இலங்கை வலுவான ஓர் அணியாக மாற்றம் பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கே உலகக் கிண்ணத்தை வென்றெடுக்கக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.