உடன் நாடு திரும்புமாறு இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளருக்கு அழைப்பு

Report Print Ajith Ajith in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க தென்னாபிரிக்காவில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக தென்னாபிரிக்க அணியுடனான டி20 போட்டிகளின்போது களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஸ்டீவ் ரிக்சன் செயற்படுவார் என்று ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.

மார்ச் 16ஆம் திகதியன்று இலங்கை அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையிலான இறுதி ஒருநாள் போட்டி இடம்பெறவுள்ளது.

இதன் பின்னர் ஹத்துருசிங்க நாடு திரும்புமாறு ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவர் சமீ சில்வா இன்று தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணியை சிறப்பாக வழிநடத்தியமை காரணமாக ஹத்துருசிங்க, 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

எனினும் அண்மைக்காலமாக அவருக்கு ஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கும் இடையில் பிரச்சினைகள் தீவிரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.