உலகக் கிண்ண அணியை திமுத் கருணாரட்ன வழிநடத்துவார்

Report Print Kamel Kamel in கிரிக்கெட்

எதிர்வரும் நாட்களில் இங்கிலாந்தில் ஆரம்பமாக உள்ள உலகக் கிண்ண கிரிக்கட் அணியை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக கடமையாற்றி வந்த திமுத் கருணாரட்னவிற்கு தற்பொழுது சர்வதேச ஒருநாள் அணியின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறெனினும், உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்காக இலங்கை அணியின் சார்பில் பங்கேற்கும் வீரர்களின் பெயர் விபரங்கள் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

பெரும்பாலும் இந்த உலகக் கிண்ண குழாம் நாளைய தினம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கட் தொடரை வைட் வொஷ் முறையில் இரண்டுக்கு பூச்சியம் என்ற கணக்கில் இலங்கை வெற்றியீட்டி வரலாற்று சாதனை படைத்த போது திமுத் கருணாரட்ன அணியின் தலைவராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers