கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க?

Report Print Gokulan Gokulan in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக வெளிவந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரியவருகிறது.

மேற்படி தகவல் லசித் மலிங்கவின் பெயரில் பேஸ்புக் வெளியாகியிருந்தது.

அதில் லசித் மலிங்கவை ஒருநாள் கிரிக்கெட் அணித் தலைமை பதவிலிருந்து நீக்கி, திமுத் கருணாரட்னவுக்கு தலைமைத்துவத்தை வழங்கியதன் பின் லசித் மலிங்க ஓய்வு பெறவுள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது.

எனினும் இது குறித்து கருத்து தெரிவித்த லசித் மலிங்க அதனை முற்றாக நிராகரித்துள்ளார்.

அத்துடன், சமூக வலைதளங்களில் தம்மை குறித்து வெளியாக்கப்பட்ட செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும், தனது பெயரில் பேஸ்புக் கணக்கு ஒன்று இல்லை எனவும் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.

Latest Offers