எல்.பி.எல். போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ்?

Report Print Kamel Kamel in கிரிக்கெட்

முதல் தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரிமியர் லீக் டுவன்ரி-20 போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் எல்.பி.எல் போட்டித் தொடர் கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டித் தொடரில் சில வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள் பங்கேற்க உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வரும் சில நட்சத்திர வீரர்களின் பெயர்களும் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

அன்ட்ரே ரஸல், பெப் டு ப்ளீஸி, டேவிட் மில்லர், டேவிட் மாலன் மற்றும் மான்விந்தர் பிஸ்லா ஆகிய வீரர்கள் இவ்வாறு போட்டித் தொடரிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

இங்கிலாந்து – தென் ஆபிரிக்க போட்டித் தொடரில் பங்கேற்பதனால் எல்.பி.எல் போட்டிகளில் பங்கேற்க முடியாது என டு ப்ளீஸி, மில்லர் மற்றும் மாலன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அன்ட்ரே ரஸல் உபாதை காரணமாக போட்டித் தொடலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

பிஸ்லா எவ்வித காரணங்களையும் தெரிவிக்காது போட்டித் தொடரிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 13ம் திகதி வரையில் முதலாவது எல்.பி.எல் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.