வலி­கா­மம் வடக்­கின் போரில் அளவெட்டி மத்தி சம்பியன்!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

வலி­கா­மம் வடக்­கின் போர் என வர்­ணிக்­கப்­ப­டும் அள­வெட்டி மத்­திய விளை­யாட்­டுக் கழக அணிக்­கும் அள­ வெட்டி ஞான­வை­ர­வர் விளை­யாட்­டுக் கழக அணிக்­கும் இடை­யி­லான மென்­பந்­துத் துடுப்­பாட்­டத் தொட­ரில், அள­வெட்டி மத்­திய விளை­யாட்­டுக் கழக அணி கிண்­ணம் வென்­றது.

தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி மைதா­ னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் அள­வெட்டி மத்தி விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து அள­வெட்டி ஞான­வை­ர­வர் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற அள­வெட்டி ஞான­வை­ர­வர் அணி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டத் தீர்­மா­னித்­தது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய அள­வெட்டி ஞான­வை­ர­வர் அணி 16.4 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­கள் நிறை­வில் 92 ஓட்­டங் களுக்­குச் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது.

மிது­னன் அதி­க­பட்­ச­மாக 28 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார். பந்­து­வீச்­சில் மது­சன் 3 இலக்­கு­க­ளை­யும், கஜ­மு­கன், தயா­ளன் இரு­வ­ரும் தலா 2 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.

93 ஓட்டங்களை இலக்­கா­கக் கொண்டு பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய அள­வெட்டி மத்­திய விளை­யாட்­டுக் கழக அணி 13.4 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் 4 இலக்­கு­களை இழந்து வெற்­றி­பெற்­றது.

அதி­க­பட்­ச­மாக கோகு­லன் 63 ஓட்­டங்­க­ளை­யும், ரசி­கன் 10 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் சிறி­சாந் 2 இலக்­கு­க­ளை­யும், கண­தீ­பன் ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

ஆட்ட நாய­கன் மற்­றும் சிறந்த துடுப்­பாட்ட வீர­ராக அள­வெட்டி மத்­திய விளை ­யாட்­டுக் கழக அணி­யின் கோகு­லன், அதே அணி­யின் மது­சன் சிறந்த பந்து வீச்­சா­ள­ரா­க­வும், தயா­ளன் சகல துறை வீர­ரா­க­வும் தெரி­வா­கி­னர்.

ஞான­வை­ர­வர் அணி­யின் சிறி­சாந் சிறந்த களத் தடுப் பா­ள­ரா­கவும் தெரி­வா­கினர்.

Latest Offers