தர்­சன் அதிரடி காட்ட வித்தியானந்தா கல்­லூ­ரியை வீழ்த்தியது ஸ்ரான்லி கல்லூரி!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

யாழ்ப்­பா­ணம் கர­க­ரத்­தி­னம் மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்­துக் கும் (ஸ்ரான்லி), புதுக்­கு­டி­யி­ருப்பு வித்­தி­யா­னந்­தாக் கல்­லூ­ரிக்­கும் இடை­யி­லான 50 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளைக் கொண்ட துடுப்­பாட்­டத்­தில் வெற்­றி­பெற்­றது கன­க­ரத்­தி­னம் மத்­திய மகா வித்­தி­யா­ல­யம்.

கன­க­ரத்­தி­னம் மத்­திய மகா வித்­தி­யா­லய மைதா­னத்­தில் நேற்று இந்த ஆட்­டம் நடை­பெற்­றது.

நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற வித்­தி­யா­னந்­தக் கல்­லூரி அணி முத­லில் களத்­த­டுப்­பைத் தீர்­மா­னித்­தது.

இதன்­படி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஸ்ரான்­லிக் கல்­லூரி அணி 186 ஓட்­டங்­க­ளுக்­குச் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது.

அதி­க­பட்­ச­மாக தர்­சன் 44 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார். பந்­து­வீச்­சில் வினு­சாந் 4 இலக்­கு­க­ளைக் கைப்­பற்­றி­னார்.

பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய வித்­தி­யா­னந்­தக் கல்­லூரி அணி 116 ஓட்­டங்­க­ளுக்­குச் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­ததை அடுத்து 70 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது கன­க­ரத்­தி­னம் மத்­திய மகா வித்­தி­யா­லய அணி.

பந்­து­வீச்­சில் அனு­சன் 5 இலக்­கு­க­ளை­யும், ஜிலக்­சன் 2 இலக்­கு­க­ளை­யும், தர்­சன், கதி­ர­வன், யது­சன் மூவ­ரும் தலா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

Latest Offers