உலக டெஸ்ட் அரங்கில் புதிய சாதனை படைத்த இலங்கையின் நட்சத்திர வீரர் மத்யூஸ் !

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

இலங்கை அணியின் நட்ச்சத்திரத் துடுப்பாட்ட வீரரான அஞ்சலோ மத்யூஸ் இன்றைய தினம் தென்னாபிரிக்கவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 5௦௦௦ ஓட்டங்களைக் கடந்துள்ளார்.

இதுவரை இலங்கை அணி சார்பில் குமார் சங்ககாரா, மகேல ஜெயவர்த்தன, சனத் ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா, டில்ஷான், சமரவீர, அர்ஜுனா ரணதுங்க போன்றோரின் வரிசையில் ஐயாயிரம் ஓட்டங்களைக் கடந்த வீரராக மத்யூஸ் தனது பெயரையும் பதித்துள்ளார்.

75 போட்டிகளில், 133 இனிங்ஸ்களில் விளையாடி இதுவரை எட்டு சதங்களையும் இருபத்தெட்டு அறைச்சதங்களியும் பெற்றுள்ளார்.

இரு தடவை மாத்திரமே ஓட்டமற்ற நிலையில் ஆடுகளத்தினை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

காலியில் முதல் போட்டியில் வெற்றி பெற்றதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் இலங்கை அணி முதலாவதாகத் துடுப்பெடுத்தாட வந்தது.

ஆரம்ப துடுப்பாட்டம் மிக நேர்த்தியாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

ஆரம்பத்து துடுப்பாட்ட வீரர்கள் குணதிலக மற்றும் கருணாரத்ன இருவரும் அரைச்சதத்தினைக் குவிக்க, இலங்கை அணி தந்து முதலாவது விக்கெட்டினை 116 ஓட்டங்களுக்கே இழந்தது.

தற்பொழுது மூன்று விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களுடன் ஆடி வருகின்றனர்.

களத்தில் மத்யூஸ் மற்றும் தனஞ்சய சில்வா உள்ளனர்.

Latest Offers