அரி­யாலை திரு­ம­களின் வெற்றிக்கிண்ணம் கொம்­பாந்­துறை இளை­ஞர் கழகத்தின் வசம்!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

அரி­யாலை திரு­ம­கள் சன­ச­மூக நிலை­யத்­தின் 66ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு நடத்­தப்­பட்ட கிரிக்கெட் தொட­ரின் இறு­தி­யாட்­டத்­தில் கொம்­பாந்­துறை இளை­ஞர் விளை­யாட்­டுக் கழக அணி சம்­பி­ய­னா­னது.

அரி­யாலை கன­க­ரெத்­தி­னம் மத்­திய மகா வித்­தி­யா­லய மைதா­னத்­தில் நேற்­று ­முன்­தி­னம் இடம்­பெற்ற இந்த இறு­தி­யாட்­டத்­தில் கொம்­பாந்­துறை இளை­ஞர் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து கார்­மேல் போய்ஸ் அணி மோதி­யது.

நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற கொம்­பாந்­துறை இளை­ஞர் விளை­யாட்­டுக் கழக அணி முத­லில் களத் த­டுப்­பில் ஈடு­பட்­டது.

இதன்­படி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய கார்­மேல் போய்ஸ் அணி நிர்­ண­ யிக்­கப்­பட்ட 5 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் 2 இலக்­கு­களை இழந்து 30 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது.

அதி­க­பட்­ச­மாக விது­சன் 16 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார்.

பந்­து­வீச்­சில் மேனன், விது­லன் இரு­வ­ரும் தலா ஓர் இலக்­கைக் கைப்­பற்­றி­னர்.

பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய கொம்­பாந்­துறை இளை­ஞர் அணி 3.1 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் ஓர் இலக்கை இழந்து வெற்­றி­பெற்­றது.

லவன் 14 ஓட்­டங்­க­ளை­யும், மிது­லன் 12 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

Latest Offers