இலங்கை கிரிக்கெட் இளையோர் தெரிவுக் குழுவில் இடம்பிடித்த யாழ் பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன்!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் சபையின் இளையோர் தெரிவுக்குழுவில், யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவரும், தரம் - 1 பயிற்றுநருமான ஏ.எஸ்.நிசாந்தன் மீண்டும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் இளையோர் தெரிவுக் குழுவின் 9 பேர் கொண்ட தெரிவுக்குழுவைச் சேர்ந்தவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த பட்டியலில் ஏ.எஸ்.நிசாந்தன் மீண்டும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழுவானது கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி முதல் நடைமுறையில் இருக்கும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

ஏ.எஸ்.நிசாந்தன் கடந்த 2011, 2013, 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் இந்த குழுவில் இடம்பிடித்திருந்து, தற்போது மீண்டும் தெரிவுக்குழுவில் இடம்பெற்றுள்ளார்.

இவர் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் முன்னைநாள் துடுப்பாட்ட வீரரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துடுப்பாட்ட வீரராகவும் இருந்து, தொடர்ந்து பற்றிசியன் விளையாட்டுக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்தார்.

அக்காலங்களில், விக்கெட் காப்பாளர் என்ற வகையில் நிசாந்தன் மிகவும் பிரபல்யமாகவிருந்தார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Latest Offers