கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு சிறை!

Report Print Nayana in குற்றம்
கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு சிறை!

வரி ஏய்ப்பு வழக்கில் அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆர்ஜெண்டினா கால்பந்து அணி வீரர் லயோனல் மெஸ்ஸி, அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸிஆகியோர் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ளனர்.

பார்சிலானோ மற்றும் அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரமான லியோனெல் மெஸ்ஸி, 2007மற்றும் 2009-ம் ஆண்டுகளில் ஏறக்குறைய 5 மில்லியன் டாலர்கள் அளவிற்கு வரிசெலுத்தாமல் ஸ்பெயின் நாட்டு அரசை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

வரிசெலுத்தாமல் இருந்ததற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.இதன் காரணமாக மெஸ்ஸிக்கும், அவரது தந்தைக்குக்கும் அதிகளவில் அபராதம் மற்றும்சிறை தண்டனை ஆகியவற்றை ஸ்பெயினின் வரி முகைமை கோரியது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.

அதன்படி, வரி ஏய்ப்பு வழக்கில்மெஸ்ஸிக்கு 21 மாத சிறைத்தண்டனையும் ரூ. 15 கோடி அபராதமும் விதித்தது ஸ்பெயின்நீதிமன்றம்.

மெஸ்ஸியின் தந்தைக்கும் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments