பணம் கொடுக்க மறுத்த பெண்ணை கொடூரமாக கற்பழித்த பிச்சைக்காரன்

Report Print Thayalan Thayalan in குற்றம்

பிரித்தானியா நாட்டில் பணம் கொடுக்க மறுத்த பெண் ஒருவரை கொடூரமாக கற்பழித்துவிட்டு தப்பிய பிச்சைக்காரனை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேற்கு லண்டனில் உள்ள Islington என்ற பகுதியில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இரண்டு தினங்களுக்கும் முன்னர் Essex சாலையில் சுமார் 50 வயதான பெண் ஒருவர் சாலையில் நடந்துச் சென்றுள்ளார்.

அப்போது, அடையாளம் தெரியாத பிச்சைக்காரன் அந்த பெண்ணிடம் கை நீட்டி பிச்சை கேட்டுள்ளார்.

பரிதாபம் அடைந்த பெண் அவருக்கு ஒரு நாணயத்தை போட்டுவிட்டு அங்கிருந்து விலக முயன்றுள்ளார்.

ஆனால், பெண்ணை தடுத்தி நிறுத்திய அந்த பிச்சைக்காரன் மீண்டும் பணம் கேட்டு கையை நீட்டியுள்ளார்.

இதனால் எரிச்சல் அடைந்த அந்த பெண் அங்கிருந்து வேகமாக நடக்க முயன்றுள்ளார். ஆனால், அப்பெண்ணை பின் தொடர்ந்த அந்த பிச்சைக்காரன் ஆட்கள் இல்லாத தனிமையான இடம் பார்த்து அப்பெண் மீது பாய்ந்துள்ளான்.

பிச்சைக்காரனின் செய்கையால் அதிர்ச்சி அடைந்த பெண் கடுமையாக போராடியுள்ளார். ஆனால், முரட்டுத்தனமாக செயல்பட்ட பிச்சைக்காரன் கத்தியை காட்டி மிரட்டி அப்பெண்ணை கொடூரமாக கற்பழித்துள்ளான்.

பின்னர், பெண்ணின் பையில் இருந்த பணம் மற்றும் சில பொருட்களை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.

இச்சம்பத்திற்கு பிறகு பெண் பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் பொலிசார் விசாரணை செய்தபோது கற்பழித்த பிச்சைக்காரனுக்கு 35 வயது இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.

பொது இடத்தில் பணம் கொடுக்காத பெண்ணை கொடூரமாக கற்பழித்த பிச்சைக்காரனை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Latest Offers

Comments