தமிழகத்திற்கு நீர் வழங்க உச்சநீதிமன்றம் கர்நாடகாவிற்கு உத்தரவு : கலவரங்கள் உக்கிரம்

Report Print Thayalan Thayalan in குற்றம்

காவேரி நதி நீர் தொடர்பாக தமிழகம், கர்நாடகமாநிலம் மீது குற்ற நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது.

இவ் வழக்கின் தீர்ப்பு கடந்தவாரம் தமிழகத்திற்கு காவேரி நீர் திறக்கக்கோரி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து தமிழகத்திற்கு எதிராக கர்நாடக மக்கள் போராட்டம், கடையடைப்பு, மறியல் போராட்டம் மற்றும் தமிழக முதல்வரின் உருவப்பொம்மை எரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் சமூகவலைத்தளத்தில் குறித்த போராட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதிவொன்றை இட்டிருந்தார். இதனை அறித்த கர்நாடக மாநில இளைஞரொருவர் குறித்த பதிவையிட்ட இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து உலக பிரசித்திபெற்ற இரமேஸ்வரம் கோயிலுக்கு இன்று காலை வருகை தந்த கர்நாடக யாத்திரீகர்கள் மற்றும் அவர்கள் பயணித்த வாகனம் மீதும் தமிழ் அமைப்புக்கள், நாம் தமிழர் கட்சியினர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழர் தேசிய முன்னணியினர் தாக்குதல் மேற்கொண்டனர்.

இத் தாக்குதலால் ஒரு வேன், 3 கார் மற்றும் இரு சொகுசு போக்குவரத்து பஸ் ஆகியன பலத்த சேதமடைந்தன.

குறித்த சம்பவம் தொடர்பில் இராமேஸ்வரம் பொலிஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோவை இங்கே அழுத்தி பார்க்கவும்…

Comments