நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு!

Report Print Ramya in குற்றம்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக ஒக்டோபர் 3 ஆம் திகதியன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அவமதித்த குற்றத்திற்காகவே நாமலுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி உயர் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

எவ்வாறாயினும்,இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இவ்வாறான மனுவை தாக்கல் செய்ய முடியாது என கடந்த ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி நாமலின் வழக்கறிஞர் நீதிமன்றில் கூறியிருந்தார்.

எனவே நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இந்த வழக்கு ஒக்டோபர் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Latest Offers

Comments