குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்படவுள்ள முன்னாள் கடற்படை தளபதி

Report Print Kumutha Kumutha in குற்றம்
173Shares

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

ஊடகவியலாளர் ஒருவரை 2009ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி கம்பஹா இம்புல்கொட பிரதேசத்தில் வைத்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தில் கடற்படை தளபதியிடம் பல விடயங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காகவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக நிறுவனம் ஒன்றின் மூலம் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களை மையப்படுத்தி குறித்த ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த புத்தகமானது யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கடற்படையினருக்கும், இராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்டிருந்த முரண்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments