துமிந்த சில்வாவின் மேன்முறையீட்டு மனு திங்கட்கிழமை தாக்கல்

Report Print Steephen Steephen in குற்றம்

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா, தெமட்டகொட சமிந்த 5 பேர் தமக்கு எதிராக விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்வரும் 19 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய உள்ளன.

இந்த கொலை வழக்கு தொடர்பாக 5 பேருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பானது நீதிபதிகளின் பிளவுபட்ட தீர்ப்பாகவே வழங்கப்பட்டது.

நீதிபதிகள் அமர்வின் தலைவரான நீதிபதி ஷிரான் குணரத்ன, துமிந்த சில்வா உட்பட குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிரான சாட்சியங்களை முறைப்பாட்டாளர் தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறியுள்ளதாக கூறியிருந்தார்.

அத்துடன் குற்றம் சுமத்தப்பட்டவர்களை குற்றச்சாட்டில் இருந்து முற்றாக விடுதலை செய்வதாகவும் அவர் அறிவித்தார்.

எனினும் நீதிபதிகளான பத்மினி ரணசிங்க, எம்.கே.பி.எஸ். மொராயஸ் ஆகியோர் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்மானித்தனர்.

ஏற்பட்டு வரும் நிலைமையானது துமிந்த சில்வா உட்பட தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமான மற்றும் அரசியல் அடிப்படையை உருவாக்கி வருவதாக சட்டத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Latest Offers

Comments