கர்ப்பிணிப் பெண் மரணம்: உயிரிழப்பில் மர்மம்?

Report Print S.P. Thas S.P. Thas in குற்றம்

கர்ப்பிணிப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என அம்பாறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறையில் 19 வயதுடை ஜீவனி லக்ஷிக்கா என்ற யுவதியே அவரது வீட்டில் சடலமாக நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த யுவதி இரு மாத கர்ப்பிணி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அன்றைய நாள் யுவதியின் கணவர் உந்துருளியில் ஏறி சென்றதாக அயல் வீட்டு சிறுவன் தகவல் கொடுத்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், அந்த யுவதியின் கணவர் கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இக் கொலையில் மர்மம் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரையிலும் எதுவிதமான தகவல்கள் கிடைக்காத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.