பல்லிகளை வேக வைத்து இளைஞர் செய்த மோசமான வேலை!

Report Print Kamel Kamel in குற்றம்

பல்லியைக் கொண்டு பணம் சம்பாதித்த இளைஞர் ஒருவர் தொடர்பில் மாத்தளை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல்லிகளை பிடித்து அவற்றை வேக வைத்து அவற்றை ஹோட்டல்களுக்கு எடுத்துச் சென்று அதன் ஊடாக குறித்த இளைஞர் பணம் சம்பாதித்துள்ளார்.

வேக வைத்த பல்லிகளுடன் ஹோட்டல்களுக்குள் பிரவேசிக்கும் இளைஞர், ஏதேனும் உணவு வகைகளை ஆர்டர் செய்து அதில் பாதியை உட்கொண்டுவிட்டு வீட்டில் வேக வைத்து எடுத்துச் சென்ற பல்லியை உணவில் போட்டு விடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பல்லியை உணவில் போட்டுவிட்டு ஹோட்டல் உரிமையாளரை மிரட்டி, அவர்களிடம்; குறித்த இளைஞர் பணம் பெற்றுக் கொண்டு வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 25 வயது மதிக்கத் தக்க இளைஞர் விசேடமாக ஹோட்டல்களில் இவ்வாறு தனது கை வரிசை யை காட்டி வருகின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்போது இலங்கைத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் நாடகமொன்றில் இவ்வாறான ஓர் காட்சி ஒளிபரப்புச்செய்யப்பட்டதாகவும் இதனை அடிப்படையாகக் கொண்டு இளைஞர் பணம் சம்பாதித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த முறைப்பாடு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.