பத்து லட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு

Report Print Kamel Kamel in குற்றம்

பத்து லட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபான வகைகளுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினர் குறித்த நபரை கைது செய்துள்ளதுடன், மதுபான வகைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமான முறையில் மதுபான வகைகளை குறித்த நபர் வேன் ஒன்றில் எடுத்துச் சென்ற போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு மதுபான வகைகளை குறித்த நபர் கொண்டு செல்வதாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபரை புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து பல்வேறு வகையான 117 போத்தல் மதுபானங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கொட்டாஞ்சேனை ஜிந்துபிட்டி பகுதியைச் சேர்ந்த 66 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.