லசந்த விக்ரமதுங்க கொலை! முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

Report Print Kamel Kamel in குற்றம்

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

படுகொலைச் சம்பவம் தொடர்பிலான தகவல்களை மறைத்ததாக குற்றம் சுமத்தி, குறித்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்காரவை நேற்றிரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

லசந்த கொலையுண்ட காலப் பகுதியில் கல்கிஸ்ஸ உள்ளடங்களாக மேல் மாகாண தென் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக பிரசன்ன கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார இன்று கல்கிஸ்ஸ நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.