தடை விதிக்கப்பட்ட பொருட்களுடன் சென்ற சீனப் பிரஜைக்கு நேர்ந்த கதி!

Report Print Steephen Steephen in குற்றம்

கொத்தல கிம்புட்டு என்ற மருத்துவ குணம் கொண்ட மரத்தினால் செய்யப்பட்ட குவளை தொகை ஒன்றை சட்டவிரோதமாக ஹொங்கொங் நாட்டுக்கு எடுத்துச் செய்ய முயற்சித்த சீனப் பிரஜை இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

45 வயதான இந்த சீனப் பிரஜை சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பேருவளை பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் தலா 13 ஆயிரம் ரூபா செலுத்தி இந்த குவளைகளை கொள்வனவு செய்துள்ளார். அவற்றின் மொத்த பெறுமதி ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபா என சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சீனப் பிரஜை இன்று அதிகாலை 12.50 மணியளவில் கெத்தே பசுபிக் விமானத்தில் ஹொங்கொங் நோக்கி புறப்பட்டுச் செல்ல விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

சந்தேக நபர் தனது பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 8 கொத்தல கிம்புட்டு குவளைகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மிகவும் அரிய வகை மருத்துவ குணம் கொண்ட கொத்தல கிம்புட்டு என்ற இந்த தாவரத்தின் பொருட்களை இலங்கையில் இருந்து எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.