நீதிமன்றத்திற்கு வந்தவரின் பாதணிக்குள் கஞ்சா!

Report Print Steephen Steephen in குற்றம்

பாதணிகளில் கஞ்சா மற்றும் புகையிலை மறைத்து வைத்து பாணந்துறை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சித்த ஒருவர் நீதிமன்ற பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்திற்கு வந்த நபர் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் அவரை சோதனையிட்டுள்ளனர்.

அப்போது சந்தேக நபர் தனது பாதணிகளில் சூட்டுமான முறையில் மறைத்து 50 கிராம் கஞ்சா மற்றும் 150 கிராம் புகையிலையை எடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸாரிடம் சிக்சி 6 நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.