அட்ஜரா பிரதேசத்தில் 8 இலங்கையர்கள் கைது

Report Print Ajith Ajith in குற்றம்

ஜோர்ஜியா ஊடாக சட்டவிரோதமான முறையில் எல்லையைக் கடந்து செல்ல முற்பட்ட 8 இலங்கையர்கள், அட்ஜரா பிரதேசத்தில் வைத்து எல்லை பாதுகாப்பு பொலிஸார் மற்றும் மாநில பாதுகாப்பு சேவையினர் ஆகியோரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள், எல்லைப் பாதுகாப்பைத் தவிர்த்து துருக்கில் நுழையும் நோக்கில், ஜோர்ஜிய – துருக்கி எல்லையூடாக அவர்கள் நுழைய முற்பட்டதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டவர்கள் இழைத்த குற்றத்திற்காக அவர்கள் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைய முற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2015 இல் 55 சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக ஜோர்ஜிய ஊடகம் தெரிவித்துள்ளது.