மட்டக்களப்பு நகரை அழகுப்படுத்தும் முயற்சியில் வர்த்தக சங்கத்தினர்

Report Print Navoj in குற்றம்

மட்டக்களப்பு மாநகரசபையினருக்கும், வர்த்தக சங்கத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, நேற்று மாலை மாநகர உதவி ஆணையாளர் என்.தனஞ்செயன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிற்கே உரிய தனித்துவமான அழகோடு வாவிகள் சூழப்பெற்ற நகர்ப்பகுதியினை மேலும் அழகு சேர்க்கும் நோக்கோடு மட்டக்களப்பு மாநகரசபையால் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இந்த திட்டத்தில் வர்த்தர்களின் வகிபாகம் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மாநகர எல்லைக்குள் அமைக்கப்படும் வாத்தக நிலையங்களின் கட்டட அமைவுகள் கட்டாயம் மாநகர சபையின் கட்டட விதிமுறைகளுக்கு அமைவாக அனுமதியினைப் பெற்று அமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக மையங்களின் முன்னால் உள்ள வீதிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதனால் பொது மக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதனால் முறையான வாகனத் தரிப்பிட வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதேவேளை, அபிவிருத்தி தொடர்பில் முக்கிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன் மற்றும் வர்த்தக சங்க முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers