அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் புலி போராளிகளின் நினைவுகளை மீட்டிய தமிழர்கள்! சர்வதேச ஊடகம் தகவல்

Report Print Nivetha in குற்றம்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் நேற்று சர்வதேச ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்து சனல் 4 செய்திச் சேவை கருத்து வெளியிட்டுள்ளது.

அரசியல் கொந்தளிப்புகளுக்கு இடையில் இலங்கையில் புலி போராளிகளின் நினைவுகளை மீட்டியுள்ளனர்.

நினைவுச்சின்ன நிகழ்வுகள் சிங்கள தேசியவாதிகள் மத்தியில் மிகுந்த சர்ச்சைக்குரியவையாக இருக்கின்றன.

இலங்கை ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேசத்தின் விமர்சனங்களை இலங்கை எதிர்கொண்டாலும், பொறுப்புக் கூறலில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகவும் சனல் 4 செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, மாவீரர் நாள் நிகழ்வில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் கலந்து கொண்டு சுவிடன் உச்சலா பல்கலைக்கழகத்தின் வாழ் நாள் பேராசிரியரும், உலகின் முக்கியஸ்த்துவம் வாய்ந்த ஒருவருமான peter shalk மற்றும் அவரின் மனைவி ஆகியோரிடம் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்..