வெளிநாடொன்றில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கையருக்கு நேர்ந்த கதி

Report Print Steephen Steephen in குற்றம்

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் 7வயதான இரண்டு சிறுவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் இலங்கையர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர், அவரை அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜா என அழைக்கப்படும் 19 வயதான தயான்நத் ஸ்டென்லி என்ற நபருக்கே இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த சிறார் துஷ்பிரயோக சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து நான்கு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஆபாச காட்சிகள் அடங்கிய காணொளிகளை காண்பித்து குற்றவாளி சிறுவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்டென்லி என்ற இந்த நபர் கடந்த 2012 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.