இலங்கைக்கு நான் போகவே மாட்டேன் - மாகந்துரே மதுஷ்! - வந்தடைந்த கூட்டாளிகள் கைது

Report Print Tamilini in குற்றம்

துபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலக குழு தலைவரான மாகந்துரே மதுஷ் கூடவே கைதுசெய்யப்பட்டிருந்த கூட்டாளிகள் இருவர் இன்று அதிகாலை இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கருத்து வெளியிட்டுள்ளார்.

இன்று அதிகாலை இலங்கை நேரப்படி அதிகாலை 4:55 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் U-226 மூலம் இலங்கைக்கு வந்துள்ளனர்.

48 வயதுடைய மொஹமட் ஷியாம் மற்றும் 40 வயதான லங்கா சஜிதா பெரேராவும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விமான நிலைய குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) விசாரிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து இருவரிடமும் தற்சமயம் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இந்நிலையில் நான் இலங்கைக்கு போகவே மாட்டேன் என மாகந்துரே மதுஷ் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.