இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு- பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு

Report Print S.P. Thas S.P. Thas in குற்றம்

புதிய இணைப்பு

இலங்கையில் எட்டு பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

இன்றைய குண்டுவெடிப்புகளில் இதுவரை, மூன்று காவல் அதிகாரிகள் உள்பட 218 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 452 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுவரையிலும் 218 பேர் மரணம்
  • கொழும்பு தேசிய வைத்தியசாலை- 66 மரணங்கள், 260 பேர் சிகிச்சை.
  • நீர்கொழும்பு வைத்தியசாலை - 104 மரணங்கள், 100 பேர் சிகிச்சை.
  • மட்டக்களப்பு வைத்தியசாலை- 28 மரணங்கள், 51 பேர் சிகிச்சை.
  • கழுபோவிலா வைத்தியசாலை- 2 மரணங்கள், 6 பேர் சிகிச்சை.
  • ரகமாவில்- 7 மரணங்கள், 32 பேர் சிகிச்சை.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 9 வெளிநாட்டவர்கள் அடங்குவதோடு, 13 வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு நடைபெற்ற இடங்கள்