சஹ்ரான் உருவாக்கிய ஆபத்தான தீவிரவாதிகள்! மக்களை அச்சுறுத்த சுற்றித் திரிவதாக தகவல்

Report Print Tamilini in குற்றம்

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பிரதான தரப்பு உறுப்பினர் ஐம்பத்திற்கும் அதிகமானோர் தொடர்பாக விசாரணைகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபர்கள் பாதுகாப்பு புலனாய்வு பிரிவினால் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமின் முகாமில் கலந்து கொண்டு வாள் பயிற்சி பெற்ற உறுப்பினர்களே அவர்களுக்குள் அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கு மேலதிகமாக சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாதத்தை ஏற்படுத்தும் உறுப்பினர்களும் அவர்களுக்குள் உள்ளடங்குகின்றனர். சிலர் வெடிகுண்டு தொடர்பில் பயிற்சி பெற்றுள்ளனர்.

பாதுகாப்பு புலனாய்வு பிரிவினர் கடந்த காலங்களில் மேற்கொண்ட செயற்பாடுகளில் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பிரதான தரப்பு செயற்பாட்டாளர்கள் 140 பேரின் தகவல்களை குற்ற விசாரணை திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவர்களில் 50க்கும் அதிகமானோர் நாட்டின் பல பகுதிகளிலும் மேலும் 40க்கும் அதிகமானோர் காத்தான்குடி பிரதேசத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 50 பேர் வரையில் இன்னமும் விசாரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் 20 - 30 வயதுடையவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் விசேட அதிரடிப்படையினர் தங்கள் சோதனை நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படகின்றது.

இந்த நிலையில் வெடிக்கும் நிலையில் மாத்தளையில் நேர குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.