யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் ஆபத்தான பொதிகள்

Report Print Vethu Vethu in குற்றம்

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை கேரளா கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பொதிகள் செய்யப்பட்டு கொழும்பிற்கு கொண்டு வருவதற்காக கீரிமலையில் வைக்கப்பட்டிருந்த 79 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வடமராட்சி மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கடற்படையினரும், தேசிய போதை தடுப்பு பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

34 பொதிகளில் தயார் செய்யப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டன. இவற்றின் பெறுமதி 2 கோடி 50 இலட்சம் ரூபா என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.