கொழும்பில் அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் - காரணம் வெளியானது

Report Print Tamilini in குற்றம்

கொழும்பு - பன்னிப்பிட்டிய, தெபானம பிரதேசத்தில் நேற்று அதிகாலை இளைஞன் ஒருவன் அடித்து கொலை செய்யப்பட்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்த கொலை தொடர்பில் நேற்று 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்குள், கொலை செய்யப்பட்ட இளைஞனால் தாக்கப்பட்ட இளைஞனும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட இளைஞனின் நண்பன் ஒருவர் அவரது காதலியை, இரவு வகுப்பின் பின் அழைத்து செல்வதற்காக அவ்விடத்திற்கு சென்றுள்ளார். எனினும் அங்கிருந்த குழுவினர் இனைஞனை தாக்கியதுடன், காதலியை அவ்விடத்தில் இருந்து செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான இளைஞன் கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளார். உடனடியாக அவ்விடத்திற்கு குறித்த இளைஞன் சென்ற போது 10 பேர் சேர்ந்து அவரை தாக்கியதுடன், கத்தி ஒன்றினால் நெஞ்சுப் பகுதியில் குத்தியுள்ளனர்.

படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். காதல் சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பன்னிப்பிட்டிய, தெப்பானம, பொரளை வீதியை சேர்ந்த ருசிக ருக்ஷான் என்ற 18 வயதான பாடசாலை மாணவன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 18 - 21 வயதுடைய இளைஞர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.