மகனின் திருமணத்திற்கு செல்ல நீதிமன்றத்தில் அனுமதி கோரிய பொலிஸ் மா அதிபர்

Report Print Tamilini in குற்றம்

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனது மகனின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.

இவர் தொடர்பிலான வழக்கு நேற்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட இந்த மனுவை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

தனது மகனின் திருமணம் ஜனவரி 2 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு கொழும்பு கங்காரம விகாரையில் இடம்பெறவுள்ளதாகவும், இதன் நிகழ்வு இரவு 7.00 மணிக்கு நீர்கொழும்பில் இடம்பெறவுள்ளதாகவும் இவர் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்த சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய அரச சட்டத்தரணி, இதற்கான அனுமதியை வழங்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையென சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், இது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் கவனத்துக்கு கொண்டுவருவதாக நீதிபதி அறிவித்துள்ளார்.

இந்த வழக்கு எதிர்வரும் 9 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...