சம்பிக்க சிறைக்கு அழைத்துச் செல்லும் போது ஏற்பட்ட பரபரப்பு!

Report Print Varun in குற்றம்

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்லும் போது அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று காலை முற்படுத்தப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 24ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்து.

நீதிமன்ற வளாகத்திலிருந்து முன்னாள் அமைச்சரை சிறைக்கு அழைத்துச் செல்லும்போது அவ்விடத்தில் கூடிய அவரின் ஆதரவாளர்கள் கோசங்களை ஏழுப்பி சத்தமிட்டனர். இதனால் நீதிமன்ற வளாகப்பகுதியில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டதுடன் பரபரப்பு ஏற்பட்டது.