பாட்டாளி சம்பிக்க வெளியே!! அவரது சாரதிக்கு விளக்கமறியல்

Report Print Varun in குற்றம்

நாட்டில் தற்போது பலராலும் பேசப்படும் விடயமாக காணப்படுவது முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவகவின் கைது தொடர்பான விடயமாகும். கடந்த 2016ம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் விபத்தொன்றை ஏற்படுத்தி, ஒரு நபரை காயமடைய செய்து தப்பி சென்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலே முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சரின் சாரதி இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

நீதிமன்றத்தில் முன்னிலையாகிய குறித்த சாரதியை எதிர்வரும் 06ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சரின் வாகன சாரதியாக கடமையாற்றிய துஷித குமார என்பவரே இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியவராவார்.

அவர் முன்னிலையானதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவகவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.