சிறீதரனின் 75 கள்ள வாக்குகள் விவகாரம்! - IBCதமிழ் ஊடகவியலாளர்களிடம் விசாரணை!!

Report Print Gokulan Gokulan in குற்றம்

இலங்கையில் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சட்டவிரோதமாக 75 கள்ள வாக்குகளை போட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஐ.பி.சி தமிழின் நேர்காணல் நிகழ்வொன்றில் தெரிவித்த விடயம் இலங்கையின் சமகால தேர்தல்களத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது

சிறீதரன் தெரிவித்த கருத்துக்கு எதிராக முறைப்பாடுகள் முன்வைக்கபட்ட பின்னர் இது தொடர்பாக இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு நீதித்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்றதையடுத்து இது தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் பொலிஸாருக்கு பணித்திருந்தது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு ஆதரவாக இலங்கை தேர்தல் ஆணைக்குழுவும் செயற்படுவதான விமர்சனங்கள் முன்வைக்கபட்ட நிலையில் இந்த நகர்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதனடிப்படையில் சட்டவிரோதமாக 75 கள்ள வாக்குகளை போட்டதாக கூறிய நேர்காணலை செய்த ஊடகர் திவாகர் மற்றும் அந்த நிகழ்வு பதிவின் போது பணிபுரிந்த ஐ.பி.சி தமிழின் நிகழ்ச்சி குழுவிடமும் இது குறித்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.