வடக்கு முதல்வரின் கோரிக்கையை உதாசீனம் செய்து விகாரை அமைக்கும் பிக்கு!

Report Print Suthanthiran Suthanthiran in கலாச்சாரம்
வடக்கு முதல்வரின் கோரிக்கையை உதாசீனம் செய்து விகாரை அமைக்கும் பிக்கு!

முல்லைத்தீவு- கொக்கிளாய் கிராமத்தில் தமிழர்களுக்கு சொந்தமான நிலத்தில் பௌத்த பிக்கு ஒருவரினால் அடாத்தாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரையின் கட்டுமான பணிகளை நிறுத்தக் கோரி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கொடுத்த கோரிக்கைகளை உதாசீனம் செய்து நேற்றைய தினம் காலை தொடக்கம் மேற்படி விகாரை பகுதியில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கொக்கிளாய்- முகத்துவாரம் பகுதியை அண்டிய பௌத்தர்களே இல்லாத பகுதியில் எஸ்.மணிவண்ணதாஸ் என்ற தமிழர் உட்பட சில தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலத்தை போருக்கு பின்னர் அடாத்தாக பிடித்துக் கொண் ட பௌத்த பிக்கு ஒருவர் அந்தப் பகுதியில் விகாரை ஒன்றை அமைத்து வருகின்றார்.

இந்நிலையில் குறித்த நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் அது கவனத்தில் கொள்ளப்படாமல் படையினருடைய ஒத்துழைப்புடன் அங்கே விகாரையின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் கடந்த 2016.01.05ம் திகதியும், 2016.04.25ம் திகதியும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு கொக்கிளாய் மக்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் முதலமைச்சர், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எழுத்துமூலம் குறித்த விகாரை அமைப்பு பணிகளை நிறுத்தக் கோரி கடிதம் எழுதியிருந்ததுடன் காணி அமைச்சின் செயலாளருக்கும் விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் குறித்த விட யம் வடமாகாண சபையிலும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக விகாரையின் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிறிது காலம் மேற்படி விகாரை அமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அப்பகுதிக்கு கனரக வாகனங்கள் சகிதம் வந்தவர்கள் விகாரை அமைக்கப்படும் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலத்தை துப்புரவு செய்து வருவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் மக்கள், அவர்கள் சிவில் உடையில் இருக்கும்போதும் அவர்கள் படையினராக இ ருக்கலாம். எனவும் அவர்கள் துப்புரவு பணிக்காக எடுத்து வந்திருந்த கனரக வாகனம் படையினருடைய மற்றொரு வாகனத்தில் கொண்டு வரப்பட்டது எனவும் கூறியிருக்கின்றனர்.

இதேவேளை மேற்படி விகாரைக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 வாகனங்களில் ஒருவர் வந்து விகாரை காணியில் இருந்தவர்களுடன் பேசி விட்டு சென்றதாகவும் கூறும் மக்கள், அது வடமாகாண ஆளுநராக இருக்கலாம் எனவும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

இதேவேளை மேற்படி விகாரை அமைப்பினால் நிலத்த இழந்த எஸ்.மணிவண்ணதாஸ் என்பனர் முல்லைத்தீவு மாவட்ட சட்ட உதவி ஆணைக்குழு முன்னிலையில் தமது பிரச்சினை தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகின்றது.

Latest Offers

Comments