தூய அடைக்கல அன்னையின் வருடாந்த திருவிழா திருப்பலி

Report Print Ashik in கலாச்சாரம்

மன்னார் நானாட்டான் தூய அடைக்கல அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி இன்று காலை 7.30 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.

நானாட்டன் பங்குத்தந்தை ஏ.அருள்ராஜ் அடிகளார் தலைமையில் அருட்தந்தை பெனோ அலெக்ஸ்சான்டர் சில்லா அடிகளார் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலியைத் தொடர்ந்து தூய அடைக்கல அன்னையின் திருச்சொரூப பவனியும், அதனைத்தொடர்ந்து அன்னையின் ஆசிர் வழங்கப்பட்டது.

இதன் போது நூற்றுக்கணக்கான பக்கதர்கள் கலந்து கொண்டு துய அடைக்கல அன்னையின் ஆசிர்வாதத்தினை பெற்றுக்கொண்டனர்.

Latest Offers

loading...

Comments