காக்கைத்தீவு கடலில் கரைக்கப்பட்டார் கஜமுகக் கடவுள்

Report Print Akkash in கலாச்சாரம்

கடந்த 5ஆம் திகதி விநாயகர் சதுர்த்தி ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து விநாயகருக்கு விஷேட வழிபாடுகள் நிறைவேற்றப்பட்டன.

எளிமைக்கடவுள் கஜமுகனின் விநாயகர் சதுர்த்தியானது அனைத்து இடங்களிலும் வெறும் வழிபாடுகளாக மட்டுமல்லாமல் பண்டிகையாகவே கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

எல்லாம் வல்ல விநாயகப் பெருமானின் திருவுருவத்தினை பூஜித்து விதர்ஜனம் (கடலில் கரைத்தல்) செய்யும் நிகழ்வு நேற்று முகத்துவாரம் காக்கைத்தீவு கடற்கரையில் இடம்பெற்றது.

இதன்போது ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட விநாயகப்பெருமான் பக்திபூர்வமாக கடலில் கரைக்கப்பட்டார்.

Latest Offers

loading...

Comments