இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

Report Print Thirumal Thirumal in கலாச்சாரம்
139Shares

பண்டாரவளை நகர ஸ்ரீ சிவசுப்பிரமணிய தேவஸ்தானத்தின் இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று (16) தொழில், தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஊவா மாகாண முதலமைச்சர் சி.எஸ்.தஸநாயக்க, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்த குமார், வடிவேல் சுரேஷ், சமிந்த விஜயசிரி, ஊவா மாகாண சபை உறுப்பினர் சச்சிதானந்தன் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, பக்த அடியார்கள் நன்கொடைகள் வழங்கியதோடு, இராஜகோபுரத்திற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments