இவ்வருடத்திற்குரிய கிளிநொச்சி மாவட்ட கலாசார விழா எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் காலை 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பண்பாட்டு அம்சங்களை கொண்ட புகைப்பட மற்றும் பாரம்பரிய உணவு கண்காட்சியும், பிற்பகல் 2 மணியளவில் கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.
இதில் பல்வேறு கலைநிகழ்வுகளோடு, கலைத்துறையில் பல பணிகளை செய்த கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் நான்கு மூத்த கலைஞர்களும் , நான்கு முப்பதைந்து வயதுக்குட்பட்ட இளம் கலைஞர்களும் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
இதேவேளை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரின் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் பிரத விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.