அம்மி மிதித்து..! அருந்ததி பார்த்த இங்கிலாந்து பெண்

Report Print Vino in கலாச்சாரம்
1499Shares

இந்து சமயத்தின் சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பதில் யாருமே தவறியதில்லை, இருந்தாலும் சில சில இடங்களில் இந்து சமய மரபினை பின்பற்றாத சைவ சமயத்தவரும் உள்ள இந்த காலத்தில் இங்கிலாந்தை சேர்ந்த யுவதி ஒருவர் சைவ சமய மாரபின் படி திருமணம் செய்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த இங்கிலாந்தில் வசிக்கும் இளைஞன் ஒருவருக்கும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த யுவதிக்கும் இந்து சமய முறைப்படியான திருமண நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

அண்மைக்காலங்களில் அதிகமாக வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வந்து திருமண பந்தத்தில் இணைந்து கொள்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு அனைவரது மனங்களை கவர்ந்த ஜோடியாக இவர்கள் வலம்வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments