ஜல்லிக்கட்டு தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்தார் ரஜினி!

Report Print Ramya in கலாச்சாரம்
656Shares

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வரும்நிலையில் தமிழர்களின் கலாசாரத்தில் கைவைக்கக் கூடாது என சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் விஜய் உள்ளிட்ட பலரும்கலந்து கொண்டனர்.

இதன்போது ஜல்லிக்கட்டு மீதான தடை குறித்து கருத்து தெரிவித்த ரஜினி,ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம். கலாசாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது.

என்ன கட்டுப்பாடு வேண்டுமானாலும் விதியுங்கள். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதிக்காதீர்கள்.

ஒரு கலாசாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். அதனை நாம்காப்பாற்ற வேண்டும்.

சில கட்டுப்பாடுகளை விதியுங்கள். ஆனால், ஜல்லிக்கட்டுநடத்தப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுவுக்கு இந்தியவிலங்குகள் நல சபை மிக மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதேவேளைவிலங்குகள் நல சபையின் தூதராக ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாநியமிக்கப்பட்டுள்ளதோடு இதற்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்புஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே ரஜினி காந்த் ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Comments