திருகோணமலையில் 18 மில்லியன் செலவில் புதிய கட்டடம்

Report Print Navoj in அபிவிருத்தி

கிழக்கு மாகாண கால் நடை அபிவிருத்தி சுகாதாரத் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் காரியாலய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

நீண்டகாலமாக மாகாண கால்நடை அபிவிருத்தி சுகாதாரத் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் காரியாலயத்திற்கு சொந்தக் கட்டடம் ஒன்று இல்லாமல் இயங்கி வந்தது.

தற்போது 18 மில்லியன் ரூபா பெறுமதியில் மேற்படி கட்டடம் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாகாணப் பணிப்பாளர் பாஃசி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers

loading...

Comments